பிப்ரவரி 04, ஹவுரா (West Bengal News): மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமென கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்துக்கு விற்க வற்புறுத்தியுள்ளார். மனைவியின் தொல்லை தாங்காமல், தன்னுடைய கிட்னியை விற்கவும் முடிவு செய்தார் கணவர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்று, அந்த பணத்தை மனைவியிடம் தந்துள்ளார். Dowry Death: "அழகு இல்லை.. வேலை இல்லை.." கணவரின் சித்திரவதையால் பெண் பலி - கணவர் கைது..!
காதலனுடன் ஓட்டம்:
இதையடுத்து, அவருடைய மனைவி சிறுநீரகம் விற்ற 10 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தனது பேஸ்புக் காதலனுடன் ஓடிவிட்டார். பின்னர், பராக்கூர் என்ற பகுதியில் தனது மனைவி கள்ளக்காதலருடன் வசித்து வருவதை கணவர் அறிந்தார். அங்கு சென்று கேட்டபோது, "உன்னை விவாகரத்து செய்து விடப் போகிறேன்" என்று மனைவி கூறியுள்ளார். தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர், காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
ஆண்கள் உதவி எண்கள்:
மிலாப்: 9990588768; அகில இந்திய ஆண்கள் உதவி எண்: 9911666498; ஆண்கள் நல அறக்கட்டளை: 8882498498; வாஸ்தவ் அறக்கட்டளை: 8424026498.