ஆகஸ்ட் 26, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரிலிருந்து பிரதாப்கர் நகருக்கு (Prayagraj To Pratapgarh) செல்லும் ரயில் தண்டவாளத்தில் (Railway Track), ஒருவர் தலை வைத்து படுத்திருக்கிறார். அவருக்கு பின்னால் நிழலுக்காக ஒரு குடை விரிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவ்வழியாக ரயில் வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இதனை கவனித்த ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவரை எழுப்பிவிட்டு, பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்டுள்ளது. Unified Pension Scheme: ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
இதனால் ரயில் சற்று நேரம் தாமதமாக சென்றுள்ளது. இதனை அந்த ரயில் ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ரயில் ஓட்டுநரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தண்டவாளத்தில் படுத்துறங்கிய முதியவர்:
प्रयागराज, यूपी में रेल पटरी पर एक व्यक्ति छतरी लगाकर सो रहा था। ये देखकर लोको पायलट ने ट्रेन रोक दी। फिर उसको जगाया, पटरी से हटाया। तब ट्रेन आगे बढ़ी।
Report : @AnujTyagi8171 pic.twitter.com/F1XWSLJ55h
— Sachin Gupta (@SachinGuptaUP) August 25, 2024