செப்டம்பர் 11, மோதிஹாரி (Bihar News): பீகார் மாநிலம், மோதிஹாரியின் (Motihari) சாகியா ரயில் நிலையம் (Chakia Railway Station) அருகே ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை (Suicide Attempt) செய்துகொள்வதற்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, ரயில் வர தாமதமானதால் அப்படியே ரயில் தண்டவாளத்தில் உறங்கினார். இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். பின், அதனை வீடியோ எடுத்துக்கொண்டு அருகில் சென்று பார்த்தபோது, அந்த பெண் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். Viral Video: வந்தேபாரத் ரயில் கண்ணாடி உடைப்பு.. பகீர் வீடியோ வைரல்.!
இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் வந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, 'நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன், என்னை விடுங்கள்' என கூறியுள்ளார். இருப்பினும், அவரை அப்பகுதி மக்கள் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்:
आत्महत्या करने गई थी..लेकिन आ गई नींद
बिहार : मोतिहारी के चकिया रेलवे स्टेशन पर एक लड़की आत्महत्या करने पहुंची और रेलवे ट्रैक पर ट्रेन के इंतजार करते हुए सो गई. जानकारी के मुताबिक युवती आत्महत्या करने के लिए ट्रैक पर लेटी थी लेकिन ट्रेन चालक ने इमरजेंसी ब्रेक लगाकर युवती की जान… pic.twitter.com/bSygI33X6U
— NDTV India (@ndtvindia) September 10, 2024