மே 02, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் பீகாரை சேர்ந்த தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள சாலையில், நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். Woman Died After Delivery: இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து மகப்பேறு மருத்துவர் பலி..! 

இதனையடுத்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த மர்ம நபர்கள், அவரது கணவர் இருந்தபோதிலும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) அளித்துள்ளனர். மேலும், அவர்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இல்லையெனில், கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இதுதொடர்பாக, காவல்துறையினரிடன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, பின்னர் கொடிகேஹள்ளி காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனையடுத்த விசாரணையில், சம்மந்தப்பட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.