Actor Mohanlal (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 31, திருவனந்தபுரம் (Kerala News): மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு நடிகர்கள் பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஹேமா கமிட்டி (Hema Committee) அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த 2019-ஆம் ஆண்டே சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீடு:

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியாகின. அதில், மலையாள நடிகைகள் பட வாய்ப்புக்காக பல முறை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என கூறப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை தந்ததாக சில நடிகைகள் சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். Helicopter Crash: நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்து.. மீட்பு குழுவினர் சோதனை..!

அம்மா சங்கம் கலைப்பு:

இதனையடுத்து, மலையாள நடிகர்கள் சங்கத்தின் (AMMA) தலைவர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவை தற்காலிகமாக கலைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இதுபோல, இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோரும் தங்களது சங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த புகார் குறித்து, விசாரணை நடத்த கேரள அரசு ஒரு சிறப்பு விசாரணை குழு அமைத்தது. இக்குழுவினர் நடிகைகளின் வாக்குமூலங்களை பெற்று வருகின்றனர்.

நடிகர் மோகன்லால் கருத்து:

இந்நிலையில், மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குறித்து நடிகர் மோகன்லால் (Actor Mohanlal) கூறுகையில், 'நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்குதான் இருக்கிறேன். இந்த பிரச்சனைக்கு மலையாள திரைப்பட சங்கம் மட்டுமே காரணம் கிடையாது. ஜூனியர் நடிகர், நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பரிசீலிக்கப்படுகின்றது. இந்த விசாரணைக்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைப்போம். இதுகுறித்த விஷயங்களைச் சரி செய்ய மட்டுமே நாங்கள் இங்கு வந்துள்ளோம். நான் இன்னும் ஹேமா கமிட்டியின் அறிக்கையைப் படிக்கவில்லை' என தெரிவித்தார்.