Helicopter Crash in Kedarnath (Photo Credit: @MrDkvOfficial X)

ஆகஸ்ட் 31, கேதார்நாத் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் (Kedarnath) வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் (Helicopter) திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்த மே மாதம் 24-ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக கேதார்நாத்தில் தரையிறக்கப்பட்டது. தற்போது, இந்த ஹெலிகாப்டரை பழுதுநீக்க மற்றொரு ஹெலிகாப்டர் மூலம் ராட்சத ரோப் பயன்படுத்தி எடுத்துச் செல்லப்பட்டபோது, மந்தாகினி ஆற்றில் விழுந்து நொறுங்கியுள்ளதாகவும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 10-Year-Old Girl Dies: லாரி சக்கரம் ஏறி-இறங்கி 10 வயது சிறுமி பரிதாப பலி; நொடியில் நடந்த சோகம்.!

இதுதொடர்பாக, கேதார்நாத் மாவட்ட சுற்றுலா அதிகாரி கூறுகையில், ‘எம்ஐ-17 விமானம் மூலம் ஹெலிகாப்டரை கௌச்சர் விமான (Goucher Airstrip) ஓடுதளத்துக்கு இன்று (ஆகஸ்ட் 31) கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்பேரில், விமானம் சிறிது தூரம் சென்றவுடன் எம்ஐ-17 கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது. ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்றின் வேகம் காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்’ என அவர் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் கீழே விழும் காட்சி: