டிசம்பர் 22, புதுடெல்லி (New Delhi): நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சில மருத்துவப் பொருட்கள் அடங்கிய பல குளிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தடை விதித்துள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொண்டு இந்த மருந்துகளை அரசு தடை செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகளின் பெயர்கள்: இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (Drug Controller General of India (DCGI)) ராஜீவ் ரகுவன்ஷி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருந்துக் கட்டுப்பாட்டாளர்களிடம் குளோர்பெனிரமைன் மாலேட் ஐபி 2மிகி + ஃபைனிலெஃப்ரைன் எச்சிஎல் ஐபி 5மிகி டிராப்/எம்எல் ஆகியவற்றின் 'நிலையான மருந்து கலவை' (FDC) உற்பத்தியாளர்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மருந்து லேபிள் மற்றும் மருந்துச் சீட்டில் "நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு FDC பயன்படுத்தக் கூடாது" என்ற எச்சரிக்கை விடுத்துள்ளனர். Physically Disabled Cricket: மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்காக, முதல் முறையாக இந்தியா வந்தது இங்கிலாந்து அணி: விபரம் இதோ.!
இந்தியாவில் மொத்தம் 14 FDC மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவைகளாவன: Nimesulide + Paracetamol Dispersible Tablet, அமோக்ஸிசிலின் + ப்ரோம்ஹெக்சின், போல்கோடின் + ப்ரோமெதாசின், Chlopheniramine Maleate + Phenylephrine ஹைட்ரோகுளோரைடு + காஃபின், டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட் + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு, Ambroxol ஹைட்ரோகுளோரைடு + Guaiphenesin + Levosalbutamol + Menthol, டெக்ஸ்ட்ரோமெதோர்பன் ஹைட்ரோபிரோமைடு + அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + குய்பெனெசின், டிஃபென்ஹைட்ரமைன் ஹைட்ரோகுளோரைடு + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + அம்மோனியம் குளோரைடு, டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு + குளோர்பெனிரமைன் மாலேட், Dextromethorphan Hydrobromide + Doxylamine Succinate + Phenylephrine Hydrochloride போல்கோடின் + டெக்ஸ்ட்ரோ மெத்தோர்பன் ஹைட்ரோபிரோமைடு + குளோர்பெனிரமைன் மாலேட், அம்ப்ராக்ஸால் ஹைட்ரோகுளோரைடு + டெக்ஸ்ட்ரோமெதோர்பன், ஹைட்ரோபிரோமைடு + குய்பெனெசின், டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + டாக்ஸிலமைன் சுசினேட் + குய்ஃபெனெசின், டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் ஹைட்ரோப்ரோமைடு + குளோர் பெனிரமைன் மாலேட் + குய்ஃபெனெசின்.