டிசம்பர் 22, சென்னை (Sports News): சர்வதேச அளவில் விளையாட்டு ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் கிரிக்கெட் போட்டிகள், நவீன காலகட்டத்தில் பன்மடங்கு வியாபார ரீதியான சந்தைப்படுதலை ஏற்படுத்தி இருக்கிறது. விளையாட்டு விளையாட்டாக இருப்பினும், அதற்கான உருவாகிய ரசிகர் கூட்டம் மற்றும் வரவேற்பு காரணமாக, இன்று அவை முக்கிய போட்டிகளில் ஒன்றாக ஆகிவிட்டது.
அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகள்: நடப்பு ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நிறைவுபெற்று, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தனது நாட்டிற்கு உலகக்கோப்பையுடன் பறந்து சென்றது. அதனைத்தொடர்ந்து, ஐ.பி.எல் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் ஆடவர் கிரிக்கெட் போட்டி: இந்நிலையில், வரும் 28 ஜனவரி 2024 முதல் 6 பிப்ரவரி 2024 வரை நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான (Differently abled Cricket Council of India DCCI) டி20 தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்காக முதல் முறையாக இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று இந்தியா வந்தடைந்த இங்கிலாந்து அணியினருக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. பிசிசிஐ கீழ் செயல்படும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில், விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. JAXA Test Blast Asteroid: பூமியை நோக்கி வரும் விண்கற்களை அழிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்கிய ஜப்பான்: அதிரடி அறிவிப்பு.!
இந்தியா - இங்கிலாந்து மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில், 5 டி20 தொடரில் அணிகள் விளையாடுகின்றன. குஜராத்தில் இந்த போட்டிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுசார்ந்த விபரம் பின்வருமாறு.,
ஜனவரி 27ம் தேதி அன்று முதல் போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள பி வளாகத்தில் வைத்து கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியும் ஜனவரி 30ம் தேதியில் அங்கேயே நடைபெறுகிறது. மூன்றாவது போட்டி பிப்ரவரி 01ம் தேதி குஜராத் கல்லூரி ஏ மைதானத்திலும், நான்காவது போட்டி பிப்ரவரி 03ம் தேதி இரயில்வே மைதானத்திலும், ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி பிப்ரவரி 06ம் தேதியில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்தும் நடைபெற்றுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் மற்றும் உதவியை பிசிசிஐ. டிசிசிஐ, குஜராத் கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டுள்ளன.