Sheikh Hasina (Photo Credit: @saifahmed75 X)

ஆகஸ்ட் 05, டாக்கா (World News): வங்க தேசத்தில் சுதந்திரப் போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் போராட்டம் ஆனது கைவிடப்பட்டது. இருப்பினும் போராட்டத்தில் (Bangladesh Protest) பங்கேற்றவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

வங்கதேச வன்முறை: இதை அடுத்து வங்கதேச பிரதமர் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்ட வன்முறையில் சிக்கி 14 காவலர்கள் உட்பட 98 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்நாட்டில் அனைத்து இணைய சேவைகளும் முடக்கி வைக்கப்பட்டன. Bangladesh Violence: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; 97 பேர் பலி., இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.!

பிரதமர் ராஜினாமா: இந்த நிலையில் தான் அரண்மனையில் இருந்து அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா (Prime Minister Sheikh Hasina) வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. அவர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. அவரது ஹெலிக்காப்டர் வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் வழியாக டெல்லிக்கு செல்வதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அதே நேரம் வன்முறையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் அவர் பதவியை விட்டு விலகி உயிருக்கு ஆபத்து வரலாம் என்கிற காரணத்தினால் நாட்டை விட்டு தப்பியோடி உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இதனை வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜாமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

ராணுவ ஆட்சி: மேலும் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசை ராணுவம் அமைப்பதாக (Army Rule)  அந்நாட்டு வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜாமான் நாட்டு மக்களுக்கு இடையே உரையாற்றினார். குடியரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.