டிசம்பர் 15, ஜெய்ப்பூர் (Jaipur): ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு தொகுதிகளிலும், மற்றவர்கள் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் புதிய அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏ கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பஜன்லால் ஷர்மா (Bhajanlal Sharma) முதலமைச்சர் ஆகவும் தியா குமரி மற்றும் பிரேம் சந்த் பைரவா துணை முதலமைச்சர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதலமைச்சர் பதவியேற்பு: இந்நிலையில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவானது இன்று ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்தது. இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றனர். இந்த விழாவில் பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் ஆக பதவி ஏற்று கொண்டார்.