Pregnant Job (Pixabay)

ஜனவரி 02, பீகார் (Bihar): பீகார் மாநிலம், நவாடா பகுதியில் 'ஆல் இந்தியா பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி' (All India Pregnant Job ) என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களை கர்ப்பம் ஆக்கலாம்.

நூதன மோசடி: இதற்கு வைப்புத் தொகை 13 லட்சம் கொடுக்க வேண்டும். மேலும் 799 ரூபாய் செலுத்தி, நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு பெண்களின் புகைப்படங்கள் வழங்கப்படும். பின் பெண்களின் அழகைப் பொறுத்து ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை செலுத்தினால், அந்தப் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் அந்த நபருக்கு அவருடைய 13 லட்சம் ரூபாய் தொகை வழங்கப்படும். கர்ப்பமாக விட்டால் 5 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும். WhatsApp Account Ban: வாட்ஸ்ஆப் அதிரடி... 71,96,000 அக்கவுண்ட்கள் முடக்கம்..!

காவல் துறையினர் அதிரடியாக கைது: இவர்களை நம்பி ஏராளமான இளைஞர்கள் இந்த கும்பலிடம் பணம் செலுத்தியுள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களில் 8 பேரை கைது செய்துள்ளனர். இருப்பினும் முக்கிய குற்றவாளியான முன்னா குமார் என்பவர் தலைமறைவாகியுள்ளதால், அவரை பிடிப்பதற்காக காவல் துறையினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.