Whats App (Photo Credit: Wikipedia)

ஜனவரி 02, டெல்லி (Delhi): இந்தியாவின் 2021 ஆம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் சமூக ஊடகங்களில் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துக் கொண்டே வருகிறது. அதன்படி பல்வேறு நபர்களின் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. Japan- Plane On Fire Video: ஜப்பான் விமான நிலையத்தில் பற்றி எரிந்த விமானம்... வைரலாகும் வீடியோ..!

வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்: இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் ஆப் கணக்குகள் உள்ளன. இந்த தளத்தின் மூலம் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் 2023 மட்டும் 71,69,000 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 75 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனை மெட்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்படாத வகையில் பயங்கரவாதம், குழந்தைகள் பாலியல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத நடவடிக்கைகளுக்காக இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.