Balkaur Singh (Photo Credit: @ndtv X)

மார்ச் 20, புதுடெல்லி (New Delhi): சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். அவருக்கு பணம் பறிக்கும் கும்பல்கள் பல தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தன. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்த பாடகர் சித்து மூஸ் வாலா (Sidhu Moose Wala) துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா்.

சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம், அவரது தாய்க்கு மிகுந்த வேதனையை தந்தது. இதனால் 58 வயதான சரண் சிங் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்று எண்ணியுள்ளார். தொடர்ந்து பாடகர் சித்து மூஸ் வாலாவிவன் பெற்றோருக்கு செயற்கை கருவுறுதல் முறை ஆண் குழந்தை பிறந்துள்ளது. UPSC Prelims Rescheduled: தேர்தல் எதிரொலி... யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு.. தேர்வாணையம் அறிவிப்பு..!

58 வயதான சரண் சிங், இன்-விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் (IVF) நுட்பத்தின் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்று உறவினர் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்தார். இதனால் பாடகர் சித்து மூஸ் வாலாவிவன் தந்தை பால்கவுர் சிங் சர்ச்சையில் சிக்கினார். Assisted Reproductive Technology (ART) Regulation Act 2021 சட்டத்தின்படி, செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெறும் உரிமை 21 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும் மட்டுமே உள்ளதாக வலியுறுத்துகிறது. மூஸ்வாலாவின் தந்தைக்கு சுமார் 60 வயது மற்றும் அவரது தாயார் சரண் கவுருக்கு 58 வயது.

இதனைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பதிவில் பேசிய பால்கவுர் சிங் (Balkaur Singh), "வாஹேகுருவின் ஆசீர்வாதத்தால், நாங்கள் எங்கள் மகனை மீட்டெடுத்தோம். ஆனால் அரசாங்கம் காலையில் இருந்து என்னை துன்புறுத்துகிறது, குழந்தையின் ஆவணங்களை கொடுக்கச் சொல்கிறது. இந்த குழந்தை சட்டபூர்வமானது. அனைத்து சிகிச்சைகளும் முடிவடைய அனுமதிக்குமாறு நான் அரசாங்கத்திடம், குறிப்பாக முதல்வர் பகவந்த் மான் கேட்டுக்கொள்கிறேன். நான் இங்கு இருக்கிறேன், நீங்கள் என்னை அழைக்கும் எந்த இடத்திற்கும் விசாரணைக்காக வருவேன்" என்று பேசியிருந்தார்.