Dog (Photo Credit: Pixabay)

மார்ச் 14, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் ஆக்ரோஷத் தன்மைக் (Ferocious Dogs) கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி, இனப்பெருக்கம் மற்றும் விற்பனைக்குத் தடைவிதிக்க கோரி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறு, கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. Ex-President Pratibha Patil Hospitalised: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!

இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஆபத்தான நாய் இனங்களாக பிட்புல் டெரியர, தோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போஸ்போல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய், டோர்ன்ஜாக், சர்ப்லானினாக், ஜப்பானிய தோசா மற்றும் அகிதா, மாஸ்டிஃப்ஸ், ராட்வெய்லர், டெரியர்கள், ரோடீசியன் ரிட்ஜ்பேக், உல்ஃப் நாய்கள், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ காவலர், கேன் கோர்சோ, பந்தோக் ஆகிய வெளிநாட்டு நாய்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.