டிசம்பர் 15, திருச்சூர் (Thrissur): காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் வனத்துறை அமைச்சருமான கே.பி.விஸ்வநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 83. அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். Rajasthan CM Bhajan Lal Sharma: ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு... மோடி, அமித்ஷா பங்கேற்பு..!
அவரது திடீர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கே.பி.விஸ்வநாதன் 1977, 1980 மற்றும் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் 1991-1994 மற்றும் 2004-2005களில் வனத்துறை அமைச்சராக பணிபுரிந்திருந்தார். அதன் பிறகு, 2006 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் கொடகரா தொகுதியில் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பிறகு விஸ்வநாதன், அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்.
Kerala | Senior Congress leader and former minister KP Viswanathan passed away this morning at a private hospital in Thrissur. He was 83 years old.
(file pic) pic.twitter.com/Gcdsm0xF3n
— ANI (@ANI) December 15, 2023