Flooding in North Korea (Photo Credit: @eAJEnglish X)

ஜூலை 30, பியொங்யாங் (World News): வடகொரியாவில் (North Korea) கனமழை பெய்வதும், இதனால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்வதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் சீன எல்லையை ஒட்டிய வட கொரியப் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. Sri Lanka Presidential Election 2024: இலங்கை அதிபர் தேர்தல்.. இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் எம்பியுமான சரத் பொன்சேகா போட்டி..!

அங்கு வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் மீட்புப் பணிகளில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். இந்த நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகதிகளில் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.