டிசம்பர் 20, சண்டிகர் (Haryana News): ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் (INLD) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (Former Haryana CM ) இன்று பிற்பகல் அவரது குருகிராம் இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 89. கடந்த மூன்று ஆண்டுகளாக சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலையே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல், நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, மாலை 3 மணிக்கு தகனம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Woman Gang Rape: நம்பி வந்த பெண்ணை சீரழித்த படுபாவிகள்.. 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!
ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா:
ஓம் பிரகாஷ் சவுதாலா, முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகன் ஆவார். 1989 டிசம்பரில் தொடங்கி நான்கு முறை ஹரியானா முதல்வராக சௌதாலா பதவி வகித்தார். அவரது கடைசி பதவிக்காலம் 1999 முதல் 2005 வரை நீடித்தது. ஏழு முறை எம்.எல்.ஏவாகவும் இருந்திருக்கிறார்.