ஜூன் 20, ஜாம்நகர் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் மாவட்டம், புஷ்கர் தாம் சொசைடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஜாஸ்மின் படேல். இவரின் குழந்தைகள் சம்பவத்தன்று அங்குள்ள பெட்டிக்கடையில் இருந்து சாப்பிட சிப்ஸ் பாக்கெட் ஒன்றை (Frog Found in Wafers Pocket) வாங்கி இருக்கின்றனர். இதனை படேலின் குழந்தையும், மருமகனும் சாப்பிட ஆயத்தமானதாக தெரியவருகிறது. பாக்கெட்டை பிரித்த வேகத்தில் ஒருசில சிப்ஸ்களை குழந்தைகள் சாப்பிட, பாக்கெட்டுக்குள் தவளை இருந்துள்ளதை கண்டுள்ளனர். இதனை குழந்தைகள் பெரியவர்களிடம் தெரிவிக்க, அவர்கள் போனில் வீடியோ எடுத்து வைத்துவிட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிபிஸ் பாக்கெட்டை வாங்கி சோதித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். Vijay Condolences on Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரம்; நடிகர் & த.வெ.க தலைவர் இரங்கல்.!
கேள்விக்குறியாகும் உணவுகள் மற்றும் சிற்றுண்டி பொருட்களின் தரம்:
மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்க மறுத்துள்ள சிப்ஸ் தயாரிப்பு நிறுவனமான பாலாஜி வேபர்ஸ் (Balaji Wafers), தவளை கிடந்ததாக கூறப்படும் விவகாரம் உண்மையானதாக இருக்காது என கூறியுள்ளது. அதிகாரிகளின் பரிசோதனையில் உண்மை அம்பலமாகும் பட்சத்தில், பாலாஜி நிறுவனம் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே மும்பையில் வாங்கப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விறல், டெல்லியில் வாங்கப்பட்ட அமுல் ஐஸ்கிரீமில் பூரான் என அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களின் தடயம் மறைவதற்குள், குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸில் தவளை இருந்த சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. உணவு தயாரிப்பு நிறுவனங்களின் அலட்சியமே இதற்கு முழு காரணமாக அமைகிறது.
அதிர்ச்சி வீடியோ இதோ:
Frog found in a wafer packet in Gujarat's Jamnagar.@TChemmel @news7tamil pic.twitter.com/R1r5xUSKUK
— Ƭɴ Thiru ࿐திருலோகசந்தர் () June 19, 2024