ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பூண்டின் விலையும் (Garlic) இருமடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அத்தியாவிசியப் பொருட்களின் விலை கூடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
உச்சம் தொடும் பூண்டு விலை: நாட்டு பூண்டு விலை கிலோ ரூ400க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டில் தேவையை குறைத்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Man Kills Pregnant Wife: கர்ப்பிணி மனைவியை கொன்ற கொடூர கணவன்... திண்டுக்கல்லில் பரபரப்பு..!
இந்த விலை ஏற்றம், பூண்டு விநியோகம் சீராகும் வரை தொடரும் என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பூண்டு சாகுபடி மீண்டும் வரும்போதுதான் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக குளிர் காலத்தில் பூண்டின் விளைச்சல் சற்று குறைந்து, விலை ஏறுவது வழக்கமானது தான் என்றும் கூறியுள்ளனர்.