டிசம்பர் 13, டெல்லி (Delhi): கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பூண்டின் விலையும் (Garlic) இருமடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அத்தியாவிசியப் பொருட்களின் விலை கூடுவதால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
பூண்டின் விலை அதிகரிப்பு: கடந்த வாரம் கிலோ ரூபாய் 200க்கு விற்கப்பட்ட பூண்டின் விலை இந்த வாரம் ரூபாய் 400 க்கு விற்கப்படுகிறது. ஒரே வாரத்தில் விலை இரண்டு மடங்காக ஆகியுள்ளது. பூண்டின் முக்கிய உற்பத்தி பகுதிகளான நாசிக் மற்றும் புனேயில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக மகாராஷ்டிரா முழுவதும் வரத்து குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள மொத்த விற்பனையாளர்கள் அண்டை மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து பூண்டினை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. Covid-19 cases spike: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... எச்சரிக்கை விடுத்த சிங்கப்பூர் அரசு..!
வியாபாரிகள் வேதனை: இதனால் பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களில் பூண்டின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம், பூண்டு விநியோகம் சீராகும் வரை தொடரும் என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பூண்டு சாகுபடி மீண்டும் வரும்போதுதான் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக குளிர் காலத்தில் பூண்டின் விளைச்சல் சற்று குறைந்து, விலை ஏறுவது வழக்கமானது தான் என்றும் கூறியுள்ளனர்.