ஜனவரி 17, டெல்லி (Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். அதிலும் டிஜிட்டல் கட்டண முறைக்கு பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது கூகுள் பே (Google pay) செயலியை தான். ஆனால் இந்த செயலியானது இந்தியாவிற்குள் மட்டும் தான் இயங்கும். இந்நிலையில் தற்போது இந்த செயலியானது உலகம் முழுவதும் இயங்குமாறு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. Murder For A Friend: "நண்பனின் தற்கொலைக்கு காரணம் நீதாண்டா" உயிர் நண்பனுக்காக நடந்த கொடூர கொலை: தென்காசியில் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்.!
கூகுள் பே ஒப்பந்தம்: கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீஸ் மற்றும் என் பி சி ஐ (NPCI) இன்டர்நேஷனல் பேமென்ட் ஆகியவை இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலும் யுபிஐ (UPI) சேவையை விரிவுபடுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இதனைப் பற்றி கூகுள் பே இந்தியா பார்ட்னர்ஷிப் இயக்குனர் தீக்ஷா கௌசல் கூறியதாவது, "இந்த ஒப்பந்தம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பண பரிவர்த்தனைகள் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நடைபெறும்" என்றார்.