Heavy Rain In Delhi (Photo Credit: @AdityaRajKaul X)

ஜூன் 28, புதுடெல்லி (New Delhi): தலைநகர் டெல்லியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென நேற்று கனமழை (Heavy Rain) கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட்டுள்ளன. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கியுள்ளன. மேலும் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். After Jio, Airtel Also Hikes Prices: ஜியோவைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

விமான நிலையத்தில் விபத்து: இந்த கனமழையால் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1இன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன. உள்ளே சிக்கியிருந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக டெர்மினல் 1 பகுதியில் விமானச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.