பிப்ரவரி 04, மலப்புரம் (Kerala News): கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜா (Vishnuja). இவருக்கும், ஆண் செவிலியரான பிரபின் என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் கடந்த 2023 மே மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், விஷ்ணுஜா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். மகளின் இந்த முடிவுக்கு பிரபின்தான் காரணம் என்று விஷ்ணுஜா பெற்றோர் குற்றம்சாட்டினர். Kerala Bumper Lottery 2024-2025: கேரளா லாட்டரி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் 2024-2025: மொத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? விபரம் உள்ளே.!
விஷ்ணுஜா தற்கொலை (Vishnuja suicide case):
விஷ்ணுஜா தோற்றம், நிறத்தை வைத்து, பிரபின் எந்நேரமும் குறை சொல்லி உள்ளார். அவருக்கு வேலை கிடைக்காததை குறிப்பிட்டும் அவமானப்படுத்தி வந்ததாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் பிரபின் தமது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். விஷ்ணுஜா தனக்கு நடந்த துன்புறுத்தல் பற்றி பெற்றோர்களிடம் சொல்லவில்லை, அவள் இறந்த பிறகுதான் அவளுடைய நண்பர்களிடமிருந்து அதைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். விஷ்ணுஜா ரகசியமாக டெலிகிராம் செயலியை பயன்படுத்தி, தமது நிலையை நெருங்கிய தோழி ஒருவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கணவன் அல்லது அவர்களது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094.