மே 26, வாரங்கல் (Telangana News): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜேபூர் மாவட்டம், ஊசூர் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின சிறுவன் ஜோதி நந்தா (வயது 17). சம்பவத்தன்று சிறுவன் வில் அம்பு வைத்து விளையாடிக்கொண்டு இருந்தபோது, இவரின் பக்கவாட்டு பகுதியில் அம்பு ஒன்று துளைத்துள்ளது. சிறுவனின் கல்லீரலுக்கு அடியில் நெஞ்சை நோக்கி பாய்ந்த அம்பு அப்படியே சிக்கிக்கொண்டது. இதனையடுத்து, உடனடியாக கிராமத்தினரால் மீட்கப்பட்டு அங்குள்ள பத்ராச்சலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டவர், முதலுதவி சிகிச்சைக்குப் பின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். TN Govt Advice to Foreign Job Travellers: வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை; முழு விபரம் உள்ளே.!
மருத்துவர்களின் சாதுர்யத்தால் உயிர்பிழைத்த சிறுவன்: பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, நுரையீரலில் பக்கவாட்டு பகுதியில் இதயத்திற்கு மிக அருகில் அம்பு பாய்ந்து இருந்தது உறுதியானது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, நிம்ஸ் மருத்துவர்கள் அம்பை பத்திரமாக வெளியே எடுத்து சிறுவனின் உயிரை காப்பாற்றினர். அம்பு பாய்ந்ததில் சிறுவனுக்கு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், மருத்துவர்களின் துரிதமான செயல்பாட்டினால் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த செயலை திறம்பட செய்து முடித்த சிம்ஸ் மருத்துவர் அமரேஸ்வர ராவ், மருத்துவர் பீரப்பா குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.