Indian Army (Photo Credit: @Estd_18 X)

டிசம்பர் 22, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென பதுங்கி வந்து ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் இந்த மாவட்டத்தில் இரண்டாவது முறையாக, ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. CFO Resignation Letter: எளிமையாக சிந்தித்து பணியில் இருந்து விலகிய மூத்த பொருளாதார அதிகாரி: வைரலாகும் விருப்ப ஓய்வு கடிதம்.!

4 பேர் பலி: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க, சிறப்பு படை வீரர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.