Krishna SR College Students Protest (Photo Credit: @vani_mehrotra X)

ஆகஸ்ட் 30, குடிவாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா (Krishna) மாவட்டம், குடிவல்லேறு (Gudlavalleru) பகுதியில் தன்னாட்சி பெற்ற எஸ்.ஆர் பொறியியல் (SR Gudlavalleru Engineering College) கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறர்கள். இங்கு பயின்று வரும் மாணவர்களின் வசதிக்காக பிரத்தியேக விடுதியும் செயல்பட்டு வருகிறது.

300 மாணவிகளின் வீடியோக்கள்:

இதனிடையே, சமீபத்தில் கல்லூரியின் பெண்கள் விடுதி கழிவறை, குளியலறையில் ரகசிய (Spy Camera) கேமிரா ஒன்று கண்டறியப்பட்டது. இந்த விஷயம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மொத்தமாக 300 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. Trichy NIT: கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி: கயவனுக்கு ஆதரவாக விடுதி வார்டன்.. திருச்சியில் விடியவிடிய மாணவ-மாணவிகள் போராட்டம்.! 

கல்லூரியில் பயிலும் மாணவர்-மாணவி சேர்ந்து அதிர்ச்சி செயல்:

இந்த வீடியோக்கள் அனைத்தும் மாணவி ஒருவரின் உதவியுடன் கேமிரா பொருத்தப்பட்டு, அதே கல்லூரியில் போன்று வரும் மாணவர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் ஆண்கள் விடுதி அறையில் சல்லாப எண்ணத்துடன் இருந்த கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு பிடெக் துறையில் பயின்று வரும் மாணவர், அவரின் தோழி ஆகியோர் சேர்ந்து இச்செயலில் ஈடுபட்டது அம்பலமானது.

மாணவர் கைது; காவல்துறையினர் விசாரணை:

இதுதொடர்பான விவகாரத்தை அறிந்த மாணவிகள் நள்ளிரவு நேரத்தில் விடுதியில் திடீர் போராட்டம் மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மாணவிகள் போராட்டம் காரணமாக காவல்துறையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, கேமிரா வைத்த மாணவர் விஜய் என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவரின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்மணியின் தந்தை அரசியல்கட்சிப் பிரமுகர் எனவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

மாணவிகள் ஒருசேர திரண்டு போராட்டம் நடத்தும் காணொளி உங்களின் பார்வைக்கு: