Palnadu Bus Fire Accident (Photo Credit: @jsuryareddy X)

மே 15, ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh News): 2024 மக்களவைத் தேர்தலில் (2024 General Elections India), வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையாற்ற நெடுந்தூரத்தில், வேறொரு நாட்டில் பயணம் செய்தாலும், தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அரசு சார்பிலும் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் நாளில் சிறப்பு பேருந்துகள் பயன்பாடும் வழங்கப்படுகிறது.

லாரி - தனியார் பேருந்து மோதி விபத்து: இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் (Andhra Bus Accident 5 Burnt Alive) மாநிலத்தில் உள்ள பாபடலா (Bapatla) மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்துள்ளனர். பின் இவர்கள் நேற்று இரவு ஹைத்ராபாத் நோக்கி பயணம் செய்துள்ளனர். இதனிடையே, இவர்கள் பயணித்த தனியார் பேருந்து, பால்நாடு மாவட்டம், சிலகாலுரிபெட் (Chilakaluripet Palnadu) பகுதியில் லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. Boy Friend Killed By Girl Friend: வேறொரு பெண்ணுடன் பேசிய காதலனை, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கல்லூரி மாணவி.. தமிழகமே அதிர்ச்சி.! 

5 பேர் உடல் கருகி பலி., பலர் படுகாயம்: இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்த நிலையில், பேருந்தில் சிக்கிய பயணிகளில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்தமாக பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் விபத்து ஏற்பட்ட காரணத்தால், உறக்கத்தில் இருந்த பலரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேற்படி விபரங்கள் சேய்கறிக்கப்பட்டு வருகின்றன.