மே 31, திருச்சூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, திருநாவாயா, மார்னோ குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லிஜேஷ். இவரின் மனைவி செரினா (வயது 37). தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது செரினா 6வது முறையாக கருத்தரித்துள்ளார். 9 மாத கர்ப்பிணியான செரினா, கடந்த புதன்கிழமை கேரளா மாநில அரசுப்பேருந்தில் (KSRTC Bus) அங்கமலியில் இருந்து தொட்டில்பாலம் (Angamaly to Thottilpalam) நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார்.
மருத்துவமனைக்குள் நுழைந்த அரசுப்பேருந்து: பேருந்து பயணத்தின்போதே நிறைமாத (in Thrissur 37 Year Old Woman Passenger Birth to a Child Girl on KSRTC Bus) கர்ப்பிணியான செரீனாவுக்கு திடீர் பிரசவ வலி ஏற்படவே, பேருந்துக்குள் அலறியுள்ளார். இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சற்றும் தாமதிக்காமல், பெறமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அங்குள்ள திருச்சூர், அம்பலா பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை நோக்கி வாகனத்தை இயக்கி இருக்கின்றனர். World No Tobacco Day 2024: "புகையிலை சுவைத்து மகிழ்ந்திடுவாய் - அது உன்னுயிர் சுவைப்பதை நீ அறியாய்..." உலக புகையிலை எதிர்ப்பு தினம்..!
பேருந்துக்குள் பிரசவம்: மருத்துவமனை வளாகத்திற்குள் பேருந்து வருவதை பார்த்து முதலில் வாயிலில் இருக்கும் மருத்துவ குழுவினர் விழிக்க, பேருந்தில் இருந்து இறங்கிய ஒருவர் கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் துடிப்பதை தெரிவித்து மருத்துவர்களை அழைத்து இருக்கிறார். இதனையடுத்து, விரைந்து வந்த மருத்துவ பணியாளர்கள், பெண்ணுக்கு பேருந்துக்குள்ளேயே பனிக்குடம் உடைந்து குழந்தை பிரசவத்திற்கு தயாராக இருப்பதை உறுதி செய்தனர்.
தாய் - சேய் நலம்: இதனால் சற்றும் தாமதிக்காமல் பேருந்தில் இருந்த பயணிகளை இறங்கச்சொல்லி, பேருந்துக்குள்ளேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அங்கு பெண்மணி நலமுடன் பெண் குழந்தையை பெற்றெடுக்க, உடனடியாக குழந்தை செவிலியரால் மருத்துவமனைக்குள் எடுத்து செல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தாயும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மருத்துவ பணியாளர்களால் அழைத்து செல்லப்பட்டார். இந்த விஷயம் குறித்து பெறமங்கலம் காவல் துறையினர் செரினாவின் கணவருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததன் பேரில், அவரும் மருத்துவமனைக்கு விரைந்தார்.
சிசிடிவி காட்சிகள் வைரல் & பாராட்டு மழை: தாய் - சேய் இருவரும் தற்போது மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பேருந்துக்குள் பிரசவம் நடந்த நெகிழ்ச்சி செயலின் மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அதற்கு காரணதாரிகளாக இருந்த அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துனர், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. எமது லேட்டஸ்ட்லி-யும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
பேருந்துக்குள் பிரசவம்:
#WATCH | Kerala | A woman gave birth to a girl child in a KSRTC bus in Thrissur. Later, she was brought to the Amala Hospital. (29.05)
(Source: Amala Hospital PRO) pic.twitter.com/NxBW490Beg
— ANI (@ANI) May 31, 2024
மருத்துவமனைக்குள் வந்து பிரசவத்திற்கு உதவிய பேருந்து:
In what looked like a scene out of a movie, doctors at Amala Hospital in Kerala's Thrissur did the unthinkable.
A 37-year-old woman passenger in a KSRTC bus went into labour and was immediately taken to the hospital in the bus. As the delivery was almost over, wasting no time,… pic.twitter.com/0wsOLS5jKq
— The New Indian Express (@NewIndianXpress) May 30, 2024