Acid Attack on Brother & Sister in Lucknow (Photo Credit: @Benarasiyaa X)

ஜூலை 05, லக்னோ (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, சவுக் ஸ்டேடியம் பகுதியில், கடந்த ஜூலை 03ம் தேதி காலை 08:00 மணியளவில் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது 22 வயது சகோதரருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வந்த இளம்பெண்ணும், அவரின் சொந்த சகோதரரான எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவரும் சென்றுகொண்டு இருந்த சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர் திடீரென பெண் மற்றும் அவரது சகோதரர் மீது ஆசிட் (Acid Attack in Lucknow) வீசி தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றார். Special Bus for Weekend: வார இறுதி, அமாவாசை தினங்கள்.. கிளம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.! 

பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்:

நிகழ்விடத்தில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்துவிட்டு, இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். மேலும், இவர்கள் மீது தகுந்த நடத்தப்படும் பதைபதைப்பு சிசிடிவி கேமிரா காட்சிகளும் வெளியாகின. Kuala Lumpur Gas Leak: கோலாலம்பூர் விமான நிலையத்தில் திடீர் ரசாயன கசிவு; 39 பேர் உடல்நலக்குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.! 

குற்றவாளி சுட்டுப்பிடிப்பு:

இதனிடையே, 21 வயதுடைய குற்றவாளி ஒருவர் காவல்துறையினரால் சூட்டப் பிடிக்கப்பட்டார். இது தொடர்பான விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் அபிஷேக் வர்மா என்ற ஆமன் என்பது உறுதியானது. இவர் தாக்குதல் நடத்திய 21 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் காரணமாக, அவரை கொலை செய்யும் பொருட்டு ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியது அம்பலமானது. கைது செய்யப்பட்ட அபிஷேக் வர்மாவிடமிருந்து நாட்டு துப்பாக்கி, ஆசிட், ஹைட்ரஜன் பொட்டாக்சைடு போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.