PM Narendra Modi (Photo Credit: @ANI X)

செப்டம்பர் 03, புருனே (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி புருனே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாக புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். Free Aadhaar Update: உடனே ஆதார் கார்டில் இதை செஞ்சிடுங்க.. இல்லையெனில் கட்டணம்!!

புருனே பயணம்:

இந்திய பிரதமரான நரேந்திர மோடி, முதல் முறையாக புருனே நாட்டிற்கு பயணம் செய்கிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா - புருனே இடையே இணக்கமான உறவுகள் இருக்கும் நிலையில், அதனை மென்மேலும் உறுதிப்படுத்த பிரதமர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு புருனே சுல்தான் ஹாஜி ஹஸனுல் போல்கியா மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்திக்கிறார்.

சிங்கப்பூர் பயணம்:

புனேவில் இருந்து செப் 4 அன்று சிங்கப்பூர் பயணிக்கும் பிரதமர், அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோரை நேரில் சந்திக்கிறார். இந்த வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறும் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டாண்மை, டிஜிட்டல் மயமாக்கல், நீடித்த வளர்ச்சியில் நாடுகளுக்கு இடையேயான விவாதங்களை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

புருனே, சிங்கப்பூர் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவு: