Died file pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 10, புதுச்சேரி (Puducherry News): திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 52). இவர் நகை பத்தர் (Jeweler) வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இவர்களுக்கு சுதர்சன் (வயது 25) என்ற மகனும், சவுமியா (வயது 22) என்ற மகளும் இருந்தனர். கடந்த 07-ஆம் தேதி சந்திரசேகர் தனது குடும்பத்துடன் புதுச்சேரியை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கு, புதுவை முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சந்திரசேகர் விடுதி அறையை காலி செய்துவிட்டு புறப்படுவதாக இருந்தது. ஆனால், சுற்றுலா தலங்களுக்கு சென்றுவந்துள்ளதால் அசதியாக இருப்பதாக கூறி, மேலும் ஒருநாள் கேட்டு கூடுதலாக பணம் செலுத்திவிட்டு, தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். இதனையடுத்து, நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பெரியகடை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். Boy Killed By Dog Bite: தெருநாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த அறையின் மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்திரசேகர் தனது குடும்பத்துடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இதன் முதற்கட்ட விசாரணையில், ‘தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் வாங்கியுள்ளார். இதனால், கடனை (Debt Problem) செலுத்த முடியாமல், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தையும் நகையையும் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக மனமுடைந்த சந்திரசேகர் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்து மகிழ்ச்சியாக சுற்றிப்பார்த்துவிட்டு, பிறகு தற்கொலை (Family Suicide) செய்து கொண்டு இருக்கலாம்’ என்று கூறப்படுகின்றது.

ஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்தவித அடையாளமும் உடலில் இல்லை. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இன்று (ஆகஸ்ட் 10) அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதன் முடிவில்தான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்த உண்மை வெளிவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.