Wayanad Landslides (Photo Credit: @AbGeorge_ X)

ஆகஸ்ட் 02, வயநாடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு (Wayanad) மாவட்டம், முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 4 மலை கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தொடர்ந்து 4 நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக ஏற்பட்ட இந்த சோகத்தில், தற்போது வரை 316 பேர் உயிரிழந்துள்ளனர்.

200 பேரின் நிலை என்ன?

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய இராணுவம், விமானப்படை, கப்பற்படை என முப்படைகளும் இணைந்து தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்விடத்தில் இருந்த கிராமங்களில் தங்கியிருந்த 200 பேரின் நிலைமை தற்போது வரை தெரியாத காரணத்தால், அவர்களின் உடல்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. Zomato Food Bill: "என்னது கடையில் 40 ரூபாய்க்கு விற்கிற உப்மா சோமேட்டோவில் 120 ரூபாயா?.." சோமேட்டோவில் ஆர்டர் செய்தவற்கு ஆப்பு..!

இஸ்ரோ அறிக்கை:

கேரளா மாநில அரசின் பொது நிவாரண நிதிக்கு பலதரப்பிலும் இருந்து நிதிகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டது. மண்ணுக்குள் புதைந்து இருக்கும் உடல்களை நாய்கள், அதிநவீன கருவிகள் கொண்டு தேடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 86000 ஏக்கர் பரப்பு அளவிலான நிலம் சரிந்து 8 கி.மீ வரை சேர், சகதியாக அடித்து செல்லப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

4 நாட்களை கடந்தும் தொடரும் மீட்புப்பணி:

வயநாட்டில் நிலைமை சரியில்லை என்பதால், தன்னார்வலர்கள் நேரடியாக வயநாட்டுக்கு வந்து உதவி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுக்கள் தன்னார்வலர்கள் உதவிகளை பெற்று மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 4 நாட்களாக நடைபெறும் மீட்புப்பணியில், உடல்கள் ஆங்காங்கே தனித்தனியேவும் கண்டறியப்படுகிறது. இதனால் உடல்களை அடையாளம் காணும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு மிககனமழை எச்சரிக்கை:

இதனிடையே, இன்று காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம், ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.