Mumbai Mira Road Violence (Photo Credit: @Iyervval X)

ஜனவரி 22, அயோத்தி (Ayodhya): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ரூபாய் 1800 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று கும்பாபிஷேக பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கோவிலை திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். கோவில் கும்பாபிஷேக பணிகளை ஒட்டி உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பாபர் மசூதி - அயோத்தி நில வழக்கு தொடர்பான விவகாரத்தில் அளித்த தீர்ப்புக்கு பின்னர், தற்போது கோவில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று அயோத்தி நகரமே புத்துயிர் பெற்று ராமர் கோவில் திறப்புக்காக தயாராகி உள்ளது.

அயோத்தியில் குவிந்துள்ள மக்கள்: கும்பாபிஷேகத்திற்காக இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் நேரில் சென்று இருக்கின்றனர். இந்திய முழுவதும் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் பல நிகழ்ச்சிகளும், அன்னதானம் போன்றவையும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Ram Mandir Inauguration: ராமர் கோவில் கும்பாவிஷேகம்; தந்தையும் - மகனுமான அயோத்தி புறப்பட்ட ராம்சரண், சிரஞ்சீவி.! 

இருதரப்பு மோதல், வன்முறை: இந்நிலையில், மும்பையில் உள்ள மிரா ரோடு (Mira Road) பகுதியில் இந்து அமைப்பினர் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் பேரணி சென்றுள்ளனர். அப்போது, அங்கு வசித்து வந்த ஒரு தரப்பினர் தங்களது மத அடையாளத்தின் முழக்கத்தை எழுப்பியதாக தெரிய வருகிறது. இதனால் இருதரப்பு வாக்குவாதம் உண்டான நிலையில், அங்கு கைகலப்பு உண்டாகியது. கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமும் அதிகரித்தது.

காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது: இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்வித்திற்கு விரைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மேற்படி பிரச்சனை ஏற்படாமல் இருக்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய சம்பவத்தில் எடுப்பட்டவர்கள் தொடர்பாக அதிகாரிகள் கேமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.