டிசம்பர் 14, கேரளா (Kerala): 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவானது(Corona) உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பலர் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி பொருளாதார பாதிப்புகள், வேலையின்மை போன்றவைகளும் வெடித்தது. இந்த சமூகப் பிரச்சனையின் தாக்கம் இன்றுமே நீண்டு வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
கேரளாவில் பரவும் கொரோனா: பின்னர் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன் தீவிரம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் இந்த கொரோனா வைரஸ் (COVID-19) பரவல் ஆரம்பமாகி உள்ளது. இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கடந்த மாதம் 479 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த எட்டு நாட்களில் புதிதாக 825 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் தான் கேரளாவில் பன்றி காய்ச்சலும் பரவியது குறிப்பிடத்தக்கது. 21 Years of Billa: நினைவில் நீங்கா வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படம்: தல அஜித்தின் பில்லா வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு.! முழு விபரம் இதோ.!
சபரிமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்: இந்நிலையில் தற்போது கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து அதிக அளவு பக்தர்கள் குவிந்து கொண்டு இருக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேரை சபரிமலையில் தரிசனத்திற்காக புக் செய்துள்ளனர். ஆனால் 65 முதல் 70 ஆயிரம் பேர் வரை மட்டுமே தரிசிக்க முடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனா பெருமளவில் பரவக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கேரளாவில் பக்தர்கள் அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர்களை பயன்படுத்துவதை கட்டாயம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.