செப்டம்பர் 16, புதுடெல்லி (Delhi News): மத்திய டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் எம்ஏஎம்சி (MAMC) மாணவர் ஒருவர் நேற்று (செப்டம்பர் 15) தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 25 வயதான நவ்தீப் சிங் (Dr. Navdeep Singh) என்பவர் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் யுஜி (NEET UG) தேர்வில் அகில இந்திய ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்தார். Car-Bike Accident: வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து; 2 பெண்கள் பலியான சோகம்..!
இந்நிலையில், நேற்று நவ்தீப்பின் தந்தை செல்போன் மூலம் தனது மகனுக்கு தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாகியும் தொடர்புகொள்ள முடியாததால், அவரது நண்பருக்கு தொடர்பு கொண்டு அவரது அறைக்கு சென்று பார்க்க சொன்னார். அப்போது, அவரது அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் (Hanging Suicide) தொங்கியபடி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இருப்பினும், சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் நவ்தீப் இறந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதனையடுத்து, நவ்தீப் மரணம் குறித்து தகவல் தெரிவிக்க முன் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அவரது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரையும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.