ஜூன் 12, அமராவதி (Andhra Pradesh News): ஆந்திர மாநிலத்தை பொறுத்தமட்டில் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அம்மாநிலத்தில் தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஒன்றாக செயல்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த தேர்தலில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 150+ தொகுதிகளை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. 17+ தொகுதிகளை மட்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திரபாபு நாயுடு (N Chandrababu Naidu) முதல்வராக தற்போது பதவியேற்றார். Elon Musk Shares Meme From Tamil movie: எலான் மஸ்க் போட்ட மீம்.. டிரெண்டான தமிழ் திரைப்படம்..!
பதிவியேற்பு விழா: ஏற்கனவே 3 முறை முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவியேற்றார். பதவியேற்ற பின்னர் அவரை ஆரத்தழுவி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து நர லோகேஷ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்று வருகின்றனர். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஆந்திரா வந்தனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல், சினிமா பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துள்ளனர். இதற்கிடையே, ஜனசேனா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.