Gujarat Floods (Photo Credit: @PTI_News X)

ஆகஸ்ட் 29, வதோதரா (Gujarat News): குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rains) பெய்து வருகிறது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் செளராஷ்டிரா மற்றும் வதோதரா (Vadodara) பகுதிகள் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சுமார் ஆயிரக்கணக்கானோர் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். இதில், சுமார் 18 ஆயிரம் பேரை ராணுவத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு பத்திரமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருக்கின்றனர். இதுவரை பலி எண்ணிக்கை 30-யை தாண்டியுள்ளது. Three Terrorists Shot Dead: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை..!

மீட்புப் பணிகள் தீவிரம்:

இதன் மீட்புப்பணியில் ராணுவத்தினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகளின் துணையோடு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்திருப்பதால் செளராஷ்டிராவின் ஜாம்நகர் மற்றும் துவாரகா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடுகின்றனர்.

வீடுகளில் புகுந்த மழைநீர்:

துவாரகாவின் கம்பாலியா நகரில் கடந்த 36 மணி நேரத்தில் 513 மிமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. முப்படைகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வதோதராவில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்யாவிட்டாலும் விஷ்வமித்ரி ஆற்றில் அளவுக்கு அதிகமாக ஓடும் தண்ணீர் நகருக்குள் புகுந்துள்ளது. கடந்த 20 ஆண்டில் இதுபோன்று மழை வெள்ளம் (Floods) நகருக்குள் வந்ததில்லை என்று அங்குள்ள மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். வதோதராவின் சில இடங்களில் 10 முதல் 12 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது. பொதுமக்கள் தங்களது வீட்டின் மாடியில் தங்கி இருக்கின்றனர்.