ஜூன் 12, புதுடெல்லி (New Delhi): மேற்குவங்கம் மாநிலத்தில் வசித்து வரும் 4 வயது குழந்தைக்கு, எச்9 என்2 வைரஸ் பாதிப்பு இருப்பது உலக சுகாதார அமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பறவைக்காய்ச்சல் என்பது மனிதர்களுக்கு பரவும் தொற்றாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. சுவாசம் தொடர்பான பிரச்சனை, அதிக காய்ச்சல், வயிற்றுப்பிடிப்பு உட்பட பல்வேறு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த பிப்ரவரி மாதம் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். AUS Vs NAM: தொடங்கிய வேகத்தில் முடிந்த ஆஸி - நமீபியா கிரிக்கெட் போட்டி; 74 ரன்களை எடுத்து 6 ஓவருக்குள் ஆஸி., அணி அமோக வெற்றி.!
2019ம் ஆண்டுக்கு பின் பறவைக்காய்ச்சல் உறுதி:
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்ட சிறுமிக்கு சமீபத்தில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 3 மாத சிகிச்சைக்கு பின்னர் சிறுமி வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள கோழிப்பண்ணையிலும் பறவைக்காய்ச்சல் உறுதியானது. அதே நேரத்தில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நோய் பரவவில்லை. கடந்த 2019ம் ஆண்டுக்கு பின்னர் 2024ம் ஆண்டு பறவை காய்ச்சல் இந்தியாவில் மனிதருக்கு பரவியது உறுதி செய்யபட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவிய நிலையில், தற்போது இந்தியாவில் 2019ம் ஆண்டுக்கு பின் மீண்டும் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.