நவம்பர் 20, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கான (Maharashtra Assembly election) வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் (நவம்பர் 20) தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 1,00,186 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இம்முறை தோராயமாக 9.7 கோடி வாக்காளர்கள் வாகளிக்கிறார்கள். இதில் 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். 1.85 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 20.93 லட்சம் பேர் இந்த முறை முதல் முறையாக வாக்களிக்கிறார்கள். Manipur Violence: மணிப்பூரில் உச்சத்தில் வன்முறை.. எல்லைகளை மூடும் அசாம்..!
இந்தத் தேர்தலில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகா யூதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில் 2 ஆயிரம் வேட்பாளர்கள் சுயேச்சைகள். மேலும், வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.