ஜனவரி 25, ஹிமாச்சலப் பிரதேசம் (Himachal Pradesh): ஜனவரி 22ஆம் தேதி அன்று அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவினை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடினர். பல மாநிலங்களில் பொது விடுமுறை அறிவித்திருந்தனர். இந்நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக ஹிமாச்சல் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் என்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 85 மாணவர்கள் விடுமுறை எடுத்து சென்றுள்ளனர். Nivetha Pethuraj: பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம்... நடிகை நிவேதா பெத்துராஜ் சாதனை..!

அதனைத் தொடர்ந்து, அன்று விடுமுறை எடுத்த மாணவர்கள் அனைவரும் ரூபாய் 2500 அபராதம் கட்ட வேண்டும் என்று அந்த கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்றும் மிரட்டி உள்ளனர். இதனை எதிர்த்து, பௌண்டா ஷாகிப் உள்ளிட்ட சில அமைப்புகள் கல்வி நிறுவனத்திற்கு வெளியே போராட்டங்களை நடத்தினர். தகவலறிந்த காவல்துறையினர், அவ்விடத்திற்கு விரைந்தனர். மேலும் காவல்துறையினர் போராட்டக்காரர்களையும் நிர்வாகத்தையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.