ஜனவரி 02, சென்னை (Chennai): இந்தியாவில் பிரதான உணவு டெலிவரி நிறுவனமாக இருப்பது ஜோமாடோ (Zomato). வீட்டில் இருந்தபடி தங்களுக்கு தேவையான உணவை செயலின் மூலம் ஆர்டர் செய்யப்படும் பட்சத்தில், வீட்டிற்கு வந்து அது நேரடியாக டெலிவரி செய்யப்படும். அதேபோல, நாம் ஆர்டர் கொடுத்த 30 முதல் 40 நிமிடங்களுக்குள், உணவு கைக்கு வரும் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர்.
மக்கள் வரவேற்பு: பல்வேறு செயலிகள் ஆன்லைன் உணவு டெலிவிற்காக செயல்பட்டு வருகிறது எனினும், ஜோமாடோ அதிக பயனர்களை கொண்டது ஆகும். இதற்காக ஒவ்வொரு நகரிலும் பிரத்தியேகமாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து, உணவு ஆர்டரின் போது செயலி பயன்பாடு தொகை (Platform Fee) ரூபாய் 3 வசூல் செய்யப்பட்டு வந்தது.
இனி ரூ.1 கூடுதலாக செலுத்த வேண்டும்: இந்நிலையில், தற்போது புத்தாண்டையொட்டி இந்த தொகையானது நேற்று முதல் ரூபாய் நான்காக உயர்த்தப்பட்டது. அந்த வகையில், இனி ஒருவர் ஜோமாடோ வழியாக ஒரு முறை உணவு ஆர்டர் செய்யும் பட்சத்தில், அவர் உணவுத்தொகையிலிருந்து ரூபாய் 4 கூடுதலாக செலுத்த வேண்டும். Cyber Crime: இராணுவ வீரர் போல நடித்து, மூத்த நடிகரிடம் ரூ.85 ஆயிரம் மோசடி; பிளாட் விற்பதாக ஆசை காட்டி துணிகரம்.!
ஆகஸ்டில் அறிமுகமாகி தொடரும் வசூல்: ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு அன்று மட்டும் இந்த தொகை ரூபாய் 9 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்படும்போது, செயலியை பயன்படுத்துவதற்கான தொகையாக ரூ.4 செலுத்த வேண்டும். கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் பிளாட்பார்ம் தொகை ரூபாய் இரண்டு என அறிமுகம் செய்யப்பட்டது, இன்று ரூ.3ஐ கடந்து 4ல் வந்து நிற்கிறது.
வருமானம் அதிகம், ஜிஎஸ்டி செலுத்தியது குறைவு: ஜோமாடோ விரும்பிகளுக்கு இவையெல்லாம் பெரிதில்லை எனினும், அவர்கள் சம்பாத்தியம் செய்யும் தொகை என்பது கணக்கில் காட்டப்படாதது தான் அடுத்த சர்ச்சையை விரைவில் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் டெல்லி மற்றும் கர்நாடக மாநிலகங்களில், ஜோமாடோ உரிய ஜிஎஸ்டி வரியை செலுத்தவில்லை என சம்மன் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.