Ratan Tata (Photo Credit: Instagram)

அக்டோபர் 07, மும்பை (Maharashtra News): பிரபல தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான 86 வயதான ரத்தன் டாடா (Ratan Tata), இன்று (அக். 7) அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் (Mumbai's Breach Candy Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அங்கு பிரபல இருதய நோய் நிபுணர் மருத்துவர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றது. பெண் ஆசிரியையின் அந்தரங்க வீடியோ லீக்; அந்த விசயத்திற்கு சம்மதிக்காததால் 15 வயது சிறார் கும்பல் அதிர்ச்சி செயல்.!

வணிக உலகில் வெற்றி மற்றும் நேர்மைக்கு ஏற்ற பெயர் பெற்றவர்களில் முக்கியமானவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடா பம்பையில் 1937 டிசம்பர் 28 ஆம் தேதியன்று பிறந்தார். மும்பையை தளமாகக் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக 1991-2012 மற்றும் 2016-17 பதவி வகித்தார். டிசம்பர் 2012 இல் டாடா குழுமத்தின் தலைவராக டாடா ஓய்வு பெற்றார். அவருக்கு பின்பு டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்ற சைரஸ் மிஸ்திரி பல பிரச்சனைகளுக்கு பின்பு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 2016 முதல் இடைக்காலத் தலைவராக சிறிதுகாலம் பணியாற்றினார். டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டபோது ரத்தன் டாடா ஜனவரி 2017 இல் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் “ரத்தன் டாடா உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. வயது முதிவின் காரணமாக சிகிச்சை எடுத்து வருகின்றேன். அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.” என ரத்தன் டாடா, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவின் பதிவு: