ஆகஸ்ட் 08, புதுடெல்லி (New Delhi): டெல்லியின் நஜாப்கர் பகுதியில், தனது வீட்டில் இருந்து தங்க நகைகள், அதாவது இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு ஜோடி தங்க கம்மல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் காணாமல் போனதாக, ஆகஸ்ட் 3-ந்தேதி 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வீட்டுக்குள் யாரும் வராதது, வெளியே செல்லாதது சிசிடிவி காட்சிகளில் கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பெண்ணின் 9 ஆம் வகுப்பு படிக்கும் மகன் குற்றம் நடந்ததிலிருந்து காணாமல் போனதை கண்டுபிடித்தனர். Waqf Amendment Bill 2024: வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?!
தொடர்ந்து சிறுவனின் பள்ளி நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் ரூ.50,000 மதிப்புள்ள புதிய ஐபோன் வாங்கியுள்ளது தெரிய வந்தது. பின் பள்ளி முடித்து வீட்டிற்கு திரும்பிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த ஐபோனை கைப்பற்றினர். தொடர்ந்து தனது காதலியின் பிறந்தநாளிற்கு ஐபோன் பரிசளிக்க, தனது தாயின் தங்கத்தை திருடியதாக மாணவன் ஒப்புக்கொண்டான். மேலும் காணாமல்போன ஒரு ஜோடி தங்க கம்மல்கள், ஒரு தங்க மோதிரம் மற்றும் ஒரு செயின் மீட்கப்பட்டது. நகையை வாங்கியவரில் ஒருவரான கமல் வர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர்.