Car Rams Trailer Truck: விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பலி.. சுக்குநூறான கார்.. பதறவைக்கும் வீடியோ..!
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் ஹிம்மத்நகர் அருகே வேகமாக வந்த கார் டிரக் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
செப்டம்பர் 25, சபர்கந்தா (Gujarat News): குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் (Sabarkantha district) நடந்த பயங்கர சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . வேகமாக வந்த கார், டிரக் லாரி மீது மோதியதில் (Car Rams Trailer Truck) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். காரில் இருந்தவர்கள் ஷியாமளா ஜி கோயிலுக்குச் சென்றுவிட்டு அகமதாபாத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த விபத்து காலை 6 மணியளவில் நடந்துள்ளது. காரின் வேகம் அதிகமாக இருந்ததால் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. Shankh Air: இந்தியாவில் புதிய விமான சேவை அறிமுகம்.. ஷாங்க் ஏர் பற்றிய முழு விவரம் உள்ளே..!
காரில் மொத்தம் 8 பேர் இருந்தனர், அதில் ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இந்த பயங்கர விபத்தில் மற்ற அனைவரும் உயிர் இழந்தனர். இந்த விபத்தில் கார் பயங்கரமாக நசுங்கி போனது. இதனால் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரைத் திறக்க வேண்டியிருந்தது. இத்தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் சாலை விபத்து:
સાબરકાંઠાના હિંમતનગરમાં ગોઝારો અકસ્માત
ટ્રેલર અને કાર વચ્ચેની ટક્કરમાં 7 લોકોના મોત
શામળાજીથી અમદાવાદ જઈ રહ્યા હતા તે સમયે સર્જાયો અકસ્માત
તમામ મૃતકો અમદાવાદના રહેવાસી#gujarat #accident #sabarkatha #ahmedabad pic.twitter.com/PabYFDxgVc
— DD News Gujarati (@DDNewsGujarati) September 25, 2024
(The above story first appeared on LatestLY on Sep 25, 2024 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

