Maruti XL6 (Photo Credit: @TNTimesDrive X)

மார்ச் 08, புதுடெல்லி (New Delhi): மாருதி சுஸூகி நிறுவனம் (Maruti Suzuki) தற்போது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி தனக்கென சொந்தமாக தயாரிக்கும் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை தனது எக்ஸ்எல் 6 (Maruti XL6) காரில் பொருத்தி அந்த காரை 30 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் மாற்றி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இதற்காக மாருதி நிறுவனம் சொந்தமாக ஹச்இவி என்ற சிஸ்டத்தை தயாரித்து வருகிறது. Dolly Sohi Death: கர்ப்பப்பை புற்றுநோயால் சோகம்: பிரபல சின்னத்திரை நடிகை 48 வயதில் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.!

மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல் சிக்ஸ் கார் எர்டிகா காரின் 6 சீட்டர் வெர்ஷன் காராக இருக்கிறது. இந்த காரிலும் மாருதி நிறுவனம் உருவாக்கும் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உட்பகுத்தி விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இப்படியாக மாருதி நிறுவனத்தின் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய எக்ஸ்எல் 6 கார் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கார்கள் எல்லாம் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும்.