மே 21, தவளக்குப்பம் (Puducherry News): புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் அடுத்த தவளக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி சிவராத்திரி தினத்தன்று திடீரென மாயமானார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் இவரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். அப்போது, மறுநாள் காலை நோணாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அந்த சிறுமியை ஒருவர் இறக்கி விட்டது தெரியவந்தது. Mysterious Gang Stole Gold And Silver: நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை..! அதிகாலையில் நடந்த துணிகர சம்பவம்..!
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அங்கு சென்றதும், அவர் அங்குள்ள பழைய பாலத்தின் மேல் ஏறி, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே பெற்றோர் சிறுமியை காப்பாற்றினர். பின்னர், இதுதொடர்பாக அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுகடை கீழ்பாதி பகுதியை சேர்ந்த பாபு (வயது 29) என்பவர், புதுச்சேரியில் இருந்து மடுகரை வரை செல்லும் தனியார் பேருந்தின் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். இவர், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் (Minor Girl Rape) செய்துள்ளது தெரியவந்தது. மேலும், அவர் ஏற்கனவே 2 மனைவிகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் பாபு மீது போக்சோ மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதில், குற்றம் சாட்டப்பட்ட பாபுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நேற்றைய தினம் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 4 லட்சம் பணம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.