ஜூலை 19, டெல்லி (Delhi News): இந்திய பெருங்கடலில் உள்ள லட்சத்தீவு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. தற்போது இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளில் ராணுவ விமானநிலையங்களை (Military Airfields) அமைப்பதற்கு அரசு நேற்றைய தினம் (ஜூலை 18) ஒப்புதல் அளித்துள்ளது. இது மாலத்தீவில் இருந்து சுமார் 754 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லட்சத்தீவில் விமான படைத்தளங்களை அமைக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, தற்போது மாலத்தீவில் இருந்து சுமார் 50 மைல் தூரத்தில் உள்ள மினிகாய் தீவில் புதிய விமான தளம் கட்டுவது மற்றும் மேற்கு பகுதியில் உள்ள அகத்தி தீவில் தற்போதுள்ள விமானநிலையத்தை விரிவுபடுத்துவது ஆகிய திட்டங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. CSG Vs SS Highlights: 23 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி சேப்பாக் அணி தொடர் வெற்றி..!
இந்த இருவேறு இடங்களில் அமையக்கூடிய விமானநிலையங்கள், அனைத்து வகையான போர் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கும், நீண்ட தூர ட்ரோன்களுக்கும், மேலும் வணிக விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படும். இதன் முக்கிய நோக்கமாக சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும், அரபிக்கடலில் இந்தியாவின் கண்காணிப்பை விரிவுபடுத்துவதும் ஆகும். இந்திய விமானப்படை தலைமையிலான இந்த திட்டம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.