டிசம்பர் 23, டெல்லி (Delhi News): பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. குறிப்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. இதனால் நிதிப் பற்றாக்குறையை சந்திப்பதாக தனியார் கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. Sunny Leone Scheme: சன்னி லியோனுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை.. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் மாஸ் செயல்..!
உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
அப்போது லக்னோ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தேவைப்பட்டால் மற்ற கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தலாம். என்.ஆர்.ஐ பிரிவில் காலியாக இருக்கும் இடத்திற்கும், பொதுப்பிரிவில் இடங்களை நிரப்பலாம். சிறப்பு நீட் கவுன்சிலிந்துங் நடத்த வேண்டும். நாடு முழுவதும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.