பிப்ரவரி 16, டெல்லி (Delhi): சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கைதிகளை, தற்காலிகமாக உரிய காரணத்தின் அடிப்படையில் சில காலம் விடுவித்தல் 'பரோல்’ எனப்படும். தண்டனைக் கைதிகள் தங்களுக்கு விடுமுறை வேண்டி விண்ணப்பிப்பார்கள். தீவிர நோய்வாய்ப்படுதலால் அவசர சிகிச்சை பெறுதல், தங்கள் குடும்ப உறுப்பினர் இறப்பு, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக சாதாரண, அவசர கால விடுப்பு கோரி தண்டனை கைதிகள் சிறையில் விண்ணப்பிப்பார்கள். இந்த விடுப்புக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தருவார்கள். ஒருவேளை சிறை அதிகாரிகள், விடுமுறை தர மறுத்து விட்டால் விடுப்பு வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள். நீதிமன்றம், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களை ஆராய்ந்து பரோல் வழங்க உத்தரவிடும், அல்லது மறுக்கும். ASX Layoffs: பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு வரும் ஏஎஸ்எக்ஸ் நிறுவனம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் உள்ள சீர்திருத்த இல்லங்களில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பம் ஆவதை உச்சநீதிமன்றம் (Supreme Court) ஆய்வு செய்தது. அதில் பரோலில் வெளியே செல்லும் பெண் கைதிகள் சிலர் மீண்டும் வரும்பொழுது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளில் 62 குழந்தைகள் பிறந்ததாகவும் 181 குழந்தைகள் வெவ்வேறு இடங்களில் தங்கள் தாய்மார்களுடன் தங்கி இருப்பதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.