மே 03, திருவனந்தபுரம் (Kerala News): கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரி செல்சியஸ் வெப்பம் (104 Degrees Celsius) நிலவி வருகிறது. இதன்காரணமாக, கேரள மாநிலத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கின்றது. College Student Killed Grandfather: சிக்கன் ரைசில் விஷம் கலந்துகொடுத்து தாத்தாவை கொலை செய்த பேரன் - விசாரணையில் பரபரப்பு தகவல்..!
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் கட்டிட பணி மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த 2 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து, கோட்டையம் பகுதியில் சமீர் (வயது 35) என்பவர் கடும் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடன் இருந்தவர்கள் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். நேற்றைய முன்தினம் கேரளாவில் ஒரே நாளில் கொளுத்தும் கடுமையான வெயில் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.